உலக வறலாற்றில் எப்படி இப்படி கலாச்சாரம் தோன்றியது என்றே தெரியவில்லை. அதாவது சினிமாவில் வரும் பாடல்கள். பழைய படங்களில் வரும் பாடல்களாவது மிகவும் இரசிக்கத்தக்க வகையில் எழுதி படமாக்கப்பட்டு வந்தது. நாயகியை பார்த்து நாயகன் வர்ணித்து பாடுவது மற்றும் சோகத்தில் புலம்புவதும் சற்று அசலாக தோன்றியது. ஆனால் இன்று ஏன் இப்படி மாறி போனது. நிஜத்தில் கற்பனை கூட பண்ண முடியாத நிகழ்வுகள்தான் இன்றிய படங்களில் வரும் பாடல்கள்.
சொன்னால் சரியாக புரியாது. சிறிது கற்பனையில் நினைத்து பாருங்கள் - நீங்களும் உங்கள் துணைவியும் அல்லது மனைவியும் நாடு ரோட்டில் ஆட்டம் போடுகிறீர்கள், ஒரு கூட்டம் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறது. இது என்றாவது உங்கள் வாழ்வில் நடக்குமா அல்லது நடப்பது போல் நீங்கள் என்றாவது கற்பனை பண்ணி உள்ளீர்களா?
என்ன கொடுமை சார் இது?
இதற்க்கு எத்தனை ஆர்பாட்டங்கள், விளம்பரங்கள், இதுக்கு பாட்டு எழுதி வயிறு கழுவும் ஒரு கூட்டம்- இறுதியில் தமிழ் வளர்க்க பாடு பட்டேன் என்று கூறிக்கொ(ல்)ள்கிறது.
வாழ்கையில் கழிப்பு வேண்டும். ஆனால் அது எதார்த்தத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமே அன்றி இவ்வாறாக வாழ்க்கைக்கு முரணாக, முக்காலத்திலும் நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு கற்பனையாக இருக்க கூடாது. இக் கலையை மாற்ற முயல வேண்டும்.
சண்டை போடுங்கள், சமைத்து சாப்பிடுங்கள், விளையாட்டு விளையாடுங்கள் - இது எல்லாம் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடும் எதார்த்தங்கள். ஆனால் பாட்டு .......?
இதற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. எந்திரன் கூட இந்திரலோகத்தில் டூயட் பாடுகிறது........................?
சிரிப்புதான் வருகிறது.
ஒ மக சீய ஒ மக சீய?
No comments:
Post a Comment